கோவிட்-19 தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் காய்கறி, இறைச்சி கடை ஆகியவைகள் மட்டும் இயங்கும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேவுள்ள அதிராம்பட்டினம் மீன்மார்கெட் வழக்கம் போல் இன்று செயல்படத்தொடங்கியது. ஆனால் பொதுமக்கள் அதிகளவில் மீன் விற்பனை நிலையங்களில் கூடியுள்ளனர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர்.
பின்னர், தடியடி நடத்திய காவல்துறையினர் அங்கிருந்த பொதுமக்கள் மட்டுமின்றி, மீன் வியாபாரிகளையும் மார்கெட்டிலிருந்து வெளியேற்றினர். மீன் மார்கெட்டில் பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமலுக்கு வந்த 144 தடை உத்தரவு - பொருட்களை வாங்க குவிந்த மக்கள் கூட்டத்தால் நெரிசல்!