தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினத்தில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அதிராம்பட்டினம் பெரிய மார்க்கெட் அருகில் இருந்து புறப்பட்ட பேரணி காலேஜ் முக்கம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையை அடைந்தது. பின்னர் அங்கிருந்து பேருந்து நிலையம் வந்து நிறைவுற்றது. இதையடுத்து பேருந்து நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் கண்டன உரை நிகழ்த்தப்பட்டு ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வந்தது .இந்நிகழ்ச்சியில் திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பரித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்!