ETV Bharat / state

தனியார் நிறுவன காவலாளி கொலை - security murdered

தஞ்சையில் தனியார் நிறுவன காவலாளி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் நிறுவன காவலாளி கொலை
தனியார் நிறுவன காவலாளி கொலை
author img

By

Published : Jul 19, 2021, 10:10 AM IST

தஞ்சாவூர்: விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் (74). இவர் தளவாய்பாளையம் ரயில்வே கேட் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 18) காலை ஜெயபால் நிறுவன வாசலில், தலையில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார்.

முதற்கட்ட விசாரணை

இதுகுறித்த தகவலின் பேரில் அம்மாபேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக பாபநாசம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் காவலாளி ஜெயபாலின் இருசக்கர வாகனமும், செல்போனும் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது. காவலாளி கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகில் கருங்கல் ஒன்று ரத்தக் கரையுடன் இருந்ததால் அவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

மேலும் அப்பகுதிகளில் சமூக விரோதிகள் மது அருந்தி தகராறில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. இதனால் குடி போதையில் யாரேனும் கொலை செய்தார்களா அல்லது வேறு காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: செங்கல்பட்டில் கணவன், மனைவி மர்மமான முறையில் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.