தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய ரூபாய் 1, 250 கோடி இழப்பீடு தொகையை காலதாமதம் இன்றி வட்டியுடன் வழங்கக்கோரி வலியுறுத்தப்பட்டது.
காவரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளர் விமலநாதன் தலைமையில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் ஒன்று திரண்டு கண்களில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்: கண்களில் கறுப்புத் துணி கட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - கும்பகோணம் செய்திகள்
தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய 1, 250 கோடி ரூபாயை தாமதமின்றி, உடனே வழங்கக்கோரி விவசாயிகள் கண்களில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.