தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பாசனத்திற்காக காவிரி நீரைப் பகிர்ந்தளித்து விவசாயிகளை வாழ வைத்திட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயிகளின் நலன் கருதி கல்லணையை கரிகாலச் சோழன் கட்டினார்.
அணையைக் கட்டிய கரிகாலச் சோழனுக்கும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கல்லணையைப் புதுப்பித்த பொறியாளர் சர் ஆர்தர் காட்டனுக்கும் நன்றி செலுத்தும் வகையில், காவிரி உரிமை மீட்புக் குழு விவசாயிகள் கல்லணையில் பொங்கலிட்டு கரிகாலச் சோழனையும், பொறியாளர் சர் ஆர்தர் காட்டனையும் வணங்கினர்.
இது குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கூறுகையில், ‘ கல்லணையில் இன்று காவிரி உரிமை மீட்புக் குழுவினர் சார்பில் பொங்கல் வைத்து கரிகாலச் சோழனுக்கு நன்றி செலுத்தினோம். இதேபோல், ஆண்டுதோறும் தை இரண்டாம் நாள் கல்லணையில் பொங்கல் வைத்து கரிகாலனுக்கு நன்றி செலுத்திட உள்ளோம். தமிழ்நாடு அரசு பென்னிகுயிக்குக்கு இந்தாண்டு முதல், விழா எடுப்பது போல் ஆண்டுதோறும் கரிகாலச்சோழனுக்கும் விழா எடுக்க வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: தாராவியில் தமிழர்களின் பொங்கல் கொண்டாட்டம்!