தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா பாப்பாநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தில் வசிப்பவர்கள் திருமூர்த்தி - பிரேமா தம்பதி. இவர்களுக்கு 17 வயதில் சூர்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 14) வீட்டில் இருந்த சூர்யா திடீரென மாயமானார்.
இதையடுத்து, வில்வாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் தனது மகளை கடத்திச் சென்று விட்டதாகக் கூறி பாப்பாநாடு காவல்நிலையத்தில் தாய் பிரேமா புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் பாப்பநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமி சூர்யாவை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், சூர்யாவை கடத்திய ராஜசேகரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
சிறுமி கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜசேகருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க...பாலியல் தொல்லை சிறுமி தீக்குளித்து தற்கொலை முயற்சி!