தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள துறவிக்காடு தனியார் மண்டபத்தில் கரோனா தடுப்பு படை தன்னார்வலர்களுக்கு சீருடை, அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பேராவூரணி ஒன்றிய சேர்மன் சசிகலா ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 பஞ்சாயத்துகளிலும், 260 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சித் தலைவர்கள் மூலம் சீருடை , அடையாள அட்டை வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் தினக் கூலிகளாக வேலை பார்த்துவந்த ஏழை மக்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். இதனையறிந்த திருச்சிற்றம்பலம் காவல் துறை ஆய்வாளர் ரேணுகா தேவி ஒரு லட்சம் ரூபாய் தனது சொந்த பணத்தில் அவர்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொடுத்து உதவினார்.
இதையடுத்து ஆய்வாளர் ரேணுகா தேவியை சேர்மன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் பாராட்டி கவுரவித்தனர்.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் - உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு!