ETV Bharat / state

குடும்பத்தினர் சம்மதத்துடன் காதல் திருமணம் - காலில் விழ வைத்த கட்ட பஞ்சாயத்து! - தஞ்சாவூர்

தஞ்சாவூரில் குடும்பத்தினர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை, காலில் விழ வைத்ததும், ஊரை விட்டு ஒதுக்கியும் வைத்த கட்ட பஞ்சாயத்துக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

petition filed in collector office to take action against kata panchayat who made love marriage couple fall on their feet
காதல் திருமணம் செய்ததால் காலில் விழ வைத்து ஊரை விட்டு ஒதுக்கிய கட்ட பஞ்சாயத்து காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
author img

By

Published : Mar 4, 2023, 2:36 PM IST

காதல் திருமணம் செய்ததால் காலில் விழ வைத்து ஊரை விட்டு ஒதுக்கிய கட்ட பஞ்சாயத்து காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே பொட்டலங் குடிகாடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த சுமன்(28) என்பவர் அதே சமூகத்தை சேர்ந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 16ஆம் தேதி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்களுடைய சமூகத்தின் கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் செய்ததால் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட காதல் தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். மேலும் அந்த மனுவில், "நாங்கள் இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 16ஆம் தேதி திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் சமூகத்தின் கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் செய்ததால், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக" கூறி உள்ளனர்.

மேலும், "எங்கள் திருமணத்தில் பங்கேற்ற தங்களுடைய உறவினர் மற்றும் நண்பர்களை ஊரை விட்டு ஒதுக்கி விட்டதாகவும், ஊரில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் அபராத தொகை கட்ட வேண்டும் என்றும் சமூக தலைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதால் திருமணத்தில் பங்கேற்றவர்கள் அபராதம் கட்டி, தலைவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும்" அதில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி தங்கள் மீது சாணியை கரைத்து ஊற்றி சுத்தப்படுத்த வேண்டும் என்றும் ஊரில் எந்த நிகழ்விலும் பங்கேற்க கூடாது, கட்டுப்பாட்டை மீறி திருமணம் செய்ததால் பல லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என அவர்கள் மிரட்டியதாகவும் தெரிவித்து உள்ளனர். எனவே ஊரை விட்டு ஒதுக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து புகார் மனுவில் தெரிவித்துள்ள சமுதாய தலைவர் கணேசன் என்பவரிடம் தொலைபேசியில் கேட்டபோது, "இதுபோன்று நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர்கள் நடத்தை மற்றும் பேச்சு பிடிக்காததால், தான் அவர்களை ஊரை விட்டு விலக்கி விட்டதாகவும், மேலும் காலில் விழும்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அபராதம் யாரையும் கட்ட சொல்லவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் வயதில் மூத்தவன் என்பதால் தன்னிடம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏதேனும் புகார்கள் தெரிவிப்பார்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பதாகவும்" கூறினார்.

இதையும் படிங்க: "அடிமைப்படுத்த நினைக்கும் அரசாங்கத்தை கேள்வி கேட்க இலக்கியம் தான் தூண்டு கோள்" - கனிமொழி எம்.பி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.