தஞ்சாவூர் அருகே காவிரியில் வரும் அதிக அளவு நீர் முக்கொம்பிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. தற்போது கும்பகோணம் அருகே திருவைகாவூர் கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று (ஜூலை 18) மாலை ஆடுகளை மேய்க்கச் சென்ற 4 பேர் ஆடுகளுடன் திருவைகாவூர் கொள்ளிடம் ஆற்றில் சிக்கிக்கொண்டனர். பின்னர் மூன்று மணி நேரப்போராட்டத்திற்குப்பிறகு தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் உதவியால் ராஜேந்திரன், இ.சேட்டு, அருண், முருகன் ஆகிய நான்கு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேலும் அவர்களுடன் 15 ஆடுகளும் மீட்கப்பட்டன. ஆனால் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோட்டாட்சியர் லதா, பாபநாசம் டிஎஸ்பி பூரணி, தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் உள்ளிட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. காவிரியில் வரும் அதிக அளவு நீர் முக்கொம்பிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திருப்பிவிடப்படுகிறது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மெரினாவில் போராடத்தூண்டியவர் கைது!