ஊரடங்கால் வீடுகளைவிட்டு வெளியே வர இயலாதவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் ஆங்காங்கே சமூக ஆர்வலர்கள் உணவு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்குகின்றனர்.
அந்தவகையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மணஞ்சேரி, கள்ளப்புலியூர் உள்ளிட்ட கிராமங்களில் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தக் குடும்பங்களுக்கு கள்ளப்புலியூர் ஊராட்சித் தலைவர் முருகன் தனது சொந்த செலவில் தலா 2000 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகளை வழங்கினார்.