தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகில் உள்ள தெலுங்கன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் தெலுங்கன்குடிக்காடு கிராம கூட்டுறவு சங்கத் தலைவராக செயல்பட்டு வருகிறார். மேலும் இவர் தனியாக உரக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சங்கர் பட்டுக்கோட்டை நகர கூட்டுறவு வங்கிக்கு தனது காரை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அப்போது காரில் இருந்த 7 பவுன் நகை, 30 ஆயிரம் ரூபாய் பணம், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டி: தமிழ்நாடு வீராங்கனை அபிராமி அஜித் பங்கேற்பு