தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலகொட்டையூர் புறவழிச்சாலை-யோரமாக 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இன்று மதியம் நடந்து சென்றுள்ளார்.
அப்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அதனைத் தாங்க முடியாமல் மயங்கி சுருண்டு விழுந்துள்ளார்.
இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நிழலில் அமரவைத்துஇளைப்பாறச் செய்தனர். இதனிடையே 108 அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர், அவசர ஊர்தியில் வந்தவர்கள் அந்த முதியவருக்கு முதலுதவி செய்துள்ளனர். இருப்பினும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காவல் துறை, வருவாய்த் துறை அலுவலர்களுக்கு அளித்த தகவலின் பேரில், அந்த முதியவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.