தஞ்சாவூர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலம் சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மண்டலங்களின் கரீப் பருவம் சம்பா நெல் கொள்முதல் தொடர்பாக விவசாயப் பிரதிநிதிகளுடன் முத்தரப்பு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறும் போது, “சிறுதானியத்தை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அடுத்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு வருகின்ற பட்ஜெட்டில் திட்டம் இருக்கும். தர்மபுரி, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் ராகி, கேழ்வரகு இரண்டு கிலோ வழங்க அனுமதி அளிக்கப்பட்டு வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அரசு கொறடா கோவி.செழியன், உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'இந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி..!' - இ.யூ.முஸ்லீம் லீக் தலைவர்