ETV Bharat / state

தஞ்சாவூரில் சூர்யனார்கோயில் ஆதீனத்தின் பேச்சால் புதிய சர்ச்சை! - தஞ்சாவூர் செய்திகள்

தஞ்சாவூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், 'வருகின்ற 2024ல் நாடாளுமன்ற தேர்தலில் செ.இராமலிங்கத்தை மீண்டும் உங்கள் வாக்குகள் மூலம் வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என்று சூர்யனார்கோயில் ஆதீனம் ஆதரித்து பேசியுள்ளார்.

தஞ்சாவூரில் சூர்யனார்கோயில் ஆதீனம் பேச்சால் புதிய சர்ச்சை!

author img

By

Published : Jan 14, 2023, 5:53 PM IST

தஞ்சாவூரில் சூர்யனார்கோயில் ஆதீனம் பேச்சால் புதிய சர்ச்சை!

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில், இன்று(ஜன.14) தமிழர் திருநாளாம், பொங்கல் விழா, சமத்துவ பொங்கலாக, மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் தலைமையில், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் செ.இராமலிங்கம் மற்றும் திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அரசு தலைமை கொறடாவுமான, கோவி செழியன் ஆகியோர் முன்னிலையில், இந்து, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர் என மும்மதத்தினரும் சகோதரத்துவத்துடன் பங்கேற்க, புதிய பானையில் பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில், தொகுதிக்குட்பட்ட மக்கள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூர்யனார்கோயில் ஆதீனம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ’மதங்களுக்குள் வேறுபாடுகள், கருத்து மோதல்கள் இருந்த போதும், நாம் யாரையும் எதிரியாக பார்க்க கூடாது. சமீபத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் நான் பேசும் போது, இந்து என்று பேசவில்லை. இந்தியா என பேசினேன் என பல இந்து அமைப்புகள் எனக்கு எதிராக போராட்டங்கள் அறிவித்துள்ளன.

அன்றைக்கு எனக்கு முன்பாக பேசிய சிறுபான்மையினர், வாழ்வதற்கே அச்சமாக இருக்கிறது எனப் பேசியதை தொடர்ந்து நான் பேசும் போது, சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என நாம் அனைவரும் இனத்தால் தமிழர், பேசும் மொழியால் தமிழர். எனவே நாம் ஏன் வாழ அச்சப்பட வேண்டும். ஒருங்கிணைந்த சமுதாய தன்மை இருந்தால் மட்டும் தான் வாழ்வியல் சிறப்பாக இருக்கும்.

அன்றாட வாழ்க்கைக்கு, 1440 பொருட்கள் தேவை. அதற்கு நல்ல வணிகம் நடைபெற வேண்டும். இதன் மூலம் பொருள் ஈட்டி இன்பம் பெற்று திருவருள் பெற வேண்டும். நாட்டில் ஸ்திரமான ஆட்சி இருந்தால் தான் அந்நிய முதலீடு எளிதாக கிடைக்கும்.

கல்வியில் மேம்பாடு அடைய முடியும், நம்முடைய திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏவும் அரசு தலைமை கொறடாவுமான கோவி செழியன், சட்டமன்றத்தில், கஞ்சனூர் சுக்ரன் கோயில் கும்பாபிஷேகம், தேரோட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

வருகின்ற 2024ல் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அதிலும், செ.இராமலிங்கத்தையே (திமுக) மீண்டும் உங்கள் வாக்குகள் மூலம் வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என்று, அவரது கரத்தை உயர்த்தி பிடித்து பேசினார்.

சமூக சிந்தனையும், சகோதரத்துவமுமே நம்மை முன்னிருத்தும், முன்னேற்றும் என்றும் கூறி, அனைவருக்கும், தனது தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த சூர்யனார்கோயில் ஆதீனம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், அடுத்து வரும் தேர்தலிலும் செ.ராமலிங்கமே இத்தொகுதியில் மக்களவை உறுப்பினர் தொகுதிக்கு நிற்பார் என்றும், அவரையே வெற்றிபெற செய்யவேண்டும் என்றும்பேசியது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:Palani kumbabishekam: பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளணுமா? இதைப்படிங்க

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.