தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் விஜய் மக்கள் இயக்கத்தினர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் பூதலூர் ஒன்றிய தலைமை சார்பாக மாவட்ட தலைவர் விஜய் சரவணன், மாவட்ட செயலாளர் முனியாண்டி, தஞ்சாவூர் ஒன்றிய தலைவர்கள் முத்துப்பாண்டி, தமிழ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பூதலூர் வடக்கு, தெற்கு ஒன்றிய தலைமை மற்றும் சார்பு அணிகள் சார்பாக தென்னை, புங்கன், சொர்கம், மந்தாரை, மாதுளை, பலா, தங்க அரளி, அரநெல்லி, செண்பகம் உள்ளிட்ட 1500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:ஊரே முடங்கினாலும் உழவன் முடங்குவதில்லை' - நம்மாழ்வார் மீது பற்று கொண்ட ஆனந்த்ராஜ்!