ETV Bharat / state

ஞானசம்பந்தர் முத்து பல்லக்கு விழா.. தஞ்சை மக்கள் ஆரவாரம்! - வடக்கு வீதி

தஞ்சாவூரில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழாவினை முன்னிட்டு 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் புகழ்பெற்ற முத்து பல்லக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.

100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் முத்து பல்லக்கு விழா! ஏராளமானோர் சுவாமி தரிசனம்

author img

By

Published : Jun 6, 2023, 6:41 PM IST

100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் முத்து பல்லக்கு விழா! ஏராளமானோர் சுவாமி தரிசனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகரில் முத்து பல்லக்கு விழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த விழா 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பழமை மாறாமல் இன்றும் நடைபெற்று வருகிறது. தஞ்சைக்குப் பெருமை சேர்க்கும் முத்துப் பல்லாக்கு விழா வைகாசி மாதத்தில், மூல நட்சத்திரத்தில் நடைபெறும். அன்றைய தினம் சைவக் குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரின் குரு பூஜை நடக்கும்.

திருஞானசம்பந்தர் இறைவனிடம் ஐக்கியம் ஆன நாளாக இந்நாள் கருதப்படுகிறது. இந்நிலையில், ஆண்டு தோறும் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா வைகாசி மாதம் மூல நட்சத்திர நாளன்று நடைபெறுவதை முன்னிட்டு நள்ளிரவு முதல் பகல் வரை தஞ்சாவூரில் பல்லாண்டுகளாக முத்துப் பல்லாக்கு விழா பல்வேறு கோவில்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதே போல் இந்தாண்டு தஞ்சையில் ஜூன் 5-ஆம் தேதி இரவு தொடங்கி 6-ஆம் தேதி இன்று காலை வரை இந்த விழா நடைபெற்றது. பிரசித்தி பெற்ற விநாயகர் மற்றும் முருகன் கோயிலிலிருந்து, அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட பல்லாக்குகளில் அந்தந்த கோயில்களில் இருந்து புறப்பட்டு தஞ்சையின் முக்கிய ராஜ வீதிகளான தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

பின்னர், மீண்டும் தங்களது கோயில்களுக்கு சுவாமிகள் சென்று சேர்க்கப்பட்டனர். கடந்த ஆண்டுகளில் 24 பல்லாக்குகள் வந்த நிலையில் காலப்போக்கில் தற்போது 11 பல்லாக்குகள் மட்டுமே முத்துப் பல்லாக்கு விழாவில் கலந்து கொண்டன.

  • 1. கீழவாசல் அருள்மிகு வெள்ளை பிள்ளையார் திருக்கோயில்
  • 2.குறிச்சி தெரு அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயில்
  • 3. ஆட்டு மந்தை தெரு அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
  • 4. மகர் நோன்பு சாவடி அருள்மிகு ஜோதி விநாயகர் திருக்கோயில்
  • 5. கீழவாசல் உஜ்ஜையினி காளியம்மன் கோயில் (அருள்மிகு கல்யாண கணபதி சுவாமி)
  • 6. தெற்கு ராஜ வீதி அருள்மிகு கமல ரத்தின விநாயகர் திருக்கோயில்
  • 7. மேலராஜவீதி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
  • 8.காமராஜ் காய்கறி மார்க்கெட் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்
  • 9. வடக்கு வாசல் அருள்மிகு வடபத்ர காளியம்மன் திருக்கோயில்
  • 10.மேலவெளி ஊராட்சி ரெட்டிபாளையம் அருள்மிகு வெற்றி முருகன் திருக்கோயில்
  • 11. கீழவாசல் பழனியாண்டவர் திருக்கோவில் ஆகிய 11 கோயில்களில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது. சிவ கணங்கள் இசைக்கு, ஆட்டம் பாட்டத்துடன் இரவு நேரத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமியை காண்பதற்காக, சுற்றுப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பார்க்க கூட்டம் அலைமோதும், அதேபோல் காலையிலும் பல்லாக்கில் வீதி உலா வரும் சுவாமியை பார்த்து ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இந்த முத்து பல்லாக்கு விழாவால் தஞ்சை மாநகரம் விழா கோலமாக காணப்பட்டது.

இதையும் படிங்க: யானை தந்தத்தைக் கடத்திய 7 பேர் கைது..14 நாள் காவல்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.