ETV Bharat / state

சிஏஏ விவகாரம்: தஞ்சையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்

author img

By

Published : Mar 18, 2020, 11:56 PM IST

தஞ்சாவூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய இஸ்லாமியர்கள்
ஆர்ப்பாட்டம் நடத்திய இஸ்லாமியர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் சிறைச்சாலை போல் கூடாரம் அமைத்து அதில் சிறுவர்களை அமரவைத்து நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் உள்பட 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர்.

பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இஸ்லாமியர்கள்

இதேபோல், புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் சிறை நிரப்பும் போராட்டத்தில் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் மாநில மக்களின் உரிமைக் காப்பதற்காக சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றியதுபோல் தமிழ்நாட்டு மக்களின் உரிமையை காக்க சிஏஏவுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய இஸ்லாமியர்கள்

மேலும், கும்பகோணத்தில் உள்ள நீதிமன்றம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: சிஏஏவை எதிர்த்து செல்போன் விளக்குகளை ஒளிரச்செய்து போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.