தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேப்பெருமாநல்லூர் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் எஸ். ராமலிங்கம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். அதனடிப்படையில், இதற்கான பாராட்டு விழா தேப்பெருமாநல்லூரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராமலிங்கம் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா பகுதிகளை முதலமைச்சர் அறிவித்தாலும், இதுவரை அரசாணை வெளியிடாமலிருப்பது ஏன்? ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களால் 28 லட்சம் ஏக்கர் பாசனப் பகுதி, தற்போது 23 லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது" எனக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டாலும், ஏற்கனவே ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுத்து வரும் கிணறுகள் மூடப்படும் என்ற அறிவிப்பை பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றார்.
இதையும் படிங்க: 'ரஜினிக்கு செல்வாக்கு இருப்பதால் விமர்சனத்திற்கு ஆளாகிறார்' - செ.கு. தமிழரசன்