தஞ்சாவூர்: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவின் கழிவறையைச் சுத்தம் செய்ய டிசம்பர் 3ஆம் தேதி தூய்மைப் பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது கழிவறை நீர்த் தொட்டியில் தொப்புள் கொடியுடன் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது.
இதனைக்கண்ட தூய்மைப் பணியாளர்கள், கல்லூரி நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்ததனர். உடனடியாக கல்லூரி முதல்வர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் கபிலன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
குழந்தையை கொன்ற தாய்
இந்நிலையில், அந்தக் குழந்தையின் தாய் பூதலூரைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரியதர்ஷினியை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்தக் குழந்தை முறையற்ற உறவால் பிறந்ததால் கழிவறை நீர்த் தொட்டியில் போட்டு கொன்றதாக அதன் தாய் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : thanjavur medical college: இறந்த நிலையில் குழந்தை உடல் மீட்பு