ETV Bharat / state

சிறுமி அடித்துக் கொலை: தாயும், அவரது காதலனும் கைது! - தஞ்சாவூர் அண்மைச் செய்திகள்

திருமண பந்தத்துக்கு வெளியேயான உறவுக்கு இடையூறாக இருந்த ஏழு வயது சிறுமியை அடித்துக் கொன்று ஆற்றில் வீசிய தாய், அவரது காதலன் கைதுசெய்யப்பட்டனர்.

சிறுமி அடித்துக் கொலை: தாய், காதலன் கைது!

author img

By

Published : Sep 20, 2021, 8:19 AM IST

தஞ்சாவூர்: கோரிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கேஸ்வரன் - விஜயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு வித்யா (7), விக்னேஷ் (4) என இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரங்கேஸ்வரன் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து விஜயலட்சுமிக்கு, அவரது உறவினர் வெற்றிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது பழக்கம் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவாக மாறியுள்ளது. இந்நிலையில் இவர்களது உறவுக்கு இடையூறாக இருந்த சிறுமி வித்யாவை, வெற்றிவேல் நேற்று (செப். 19) தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழக்கவே, அவரது உடலை கல்லணை கால்வாயில் வீசியுள்ளனர்.

மனைவியிடம் புகைப்படம் பகிர்வு

அதன் பிறகு உயிரிழந்த சிறுமியின் புகைப்படத்தை, வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி நடந்தவை அனைத்தையும் வெற்றிவேல் விவரித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வெற்றிவேலின் மனைவி, தஞ்சையில் உள்ள தனது உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

பின்னர் அவரது உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் விஜயலட்சுமி, வெற்றிவேல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: யாருமில்லா வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு... போலீஸ் வலை வீச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.