ETV Bharat / state

தஞ்சையில் ஆணவக்கொலை.. இளம்பெண்ணின் பெற்றோர் சிறையில் அடைப்பு! - வாட்டாத்தி கோட்டை

Thanjavur Young Women Murder Case: தஞ்சை மாவட்டத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்ததால், இளம்பெண் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் கைது செய்து நேற்று (ஜன.10) பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Thanjavur Young Women Murder Case
தஞ்சையில் இளம்பெண் கொலை வழக்கில் தாய் மற்றும் தந்தை கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 7:06 AM IST

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், திருவோணத்தை அடுத்துள்ள வாட்டாத்தி கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நெய்வ விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் ஐஸ்வர்யா (20). இவர் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஐஸ்வர்யாவை அவரது உறவினர்கள் பல்லடத்திற்குச் சென்று, அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். சொந்த ஊருக்கு வந்த அன்றிரவு ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, உறவினர்கள் அவரது உடலை சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று, போலீசாருக்கு தெரியாமல் எரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஐஸ்வர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படும் இளைஞர் நவீன் (19), வாட்டாத்தி கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், "வேறு சமூகத்தைச் சேர்ந்த நானும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

இதை தெரிந்து கொண்ட ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் மற்றும் உறவினர்கள், ஐஸ்வர்யாவை சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் இறந்து விட்டதாகத் தெரிய வருகிறது" என்று புகார் அளித்தார்.

இதையும் படிங்க: சென்னை குற்றச்செய்திகள்: சென்னையில் 911.4 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்.. 47 நபர்கள் கைது!

இது குறித்து பாப்பா நாடு காவல்துறை ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். தகவல் அறிந்த தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து திருமணம் செய்ததால், இளம்பெண் கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வந்தது. இந்நிலையில், ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், தாய் ரோஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நேற்று (ஜன.10) பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தலைமையில் நடத்திய விசாரணையின் அடிப்படையில், குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்யா, தாய் - தந்தை இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். பின்னர், இருவரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து திருமணம் செய்ததால், இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் இன்று பதவியேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.