ETV Bharat / state

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்கள் முகாம்களில் தங்க வைப்பு - கரையோர மக்கள் முகாம்களில் தங்கவைப்பு

கும்பகோணம் அருகே அணைக்கரைப் பகுதியிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளிடம்
கொள்ளிடம்
author img

By

Published : Aug 7, 2022, 2:00 PM IST

தஞ்சாவூர்: மேட்டூர் அணையிலிருந்து 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர பகுதிகளில் பல இடங்களில் வெள்ளநீர் வீடுகளையும், விளை நிலங்களையும் சூழ்ந்தன.

கொள்ளிடம் கரையோர பகுதிகளில் வெள்ளம்

இந்நிலையில், கும்பகோணம் அருகே அணைக்கரையின் கொள்ளிட கரையோரத்தில் உள்ள விநாயகன் தெரு பகுதியில் 30-க்கும் மேலான வீடுகளை இன்று (ஆக.7) வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், அந்த வீடுகளில் வசித்த 48 ஆண்கள், 57 பெண்கள், 21 ஆண் குழந்தைகள், 13 பெண் குழந்தைகள் என மொத்தம் 139 பேரில் தற்போது 68 பேர் அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு முகாமிட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நிருபராக மாறி பாழடைந்த பள்ளியை தோலுரித்த 6ஆம் வகுப்பு மாணவன் - 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.