தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் சட்டப்பேரவை உறுப்பினர் அசோக்குமார் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (மே.18) நடைபெற்றது.
அப்போது பேராவூரணி பகுதிக்கு தனது சொந்த செலவில் இரண்டு ஆம்புலன்ஸ்களை சட்டப்பேரவை உறுப்பினர் அசோக்குமார் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், "ஊராட்சி மன்ற தலைவர் பதிவி எம்எல்ஏ பதவிக்கு இணையானது. மக்களை காக்க நீங்கள் அயராது பாடு பட வேண்டும்.
நமது பகுதியில் நோய் தொற்று அறவே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். நீங்கள் சிறப்பாக பணியாற்றும் பட்சத்தில் முதலமைச்சர் பெயரில் ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவருக்கும் பரிசு தருவேன்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்