தஞ்சாவூர்: வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 29ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவரும், பல்கலைக்கழக வேந்தருமான கி. வீரமணி, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய பொன்முடி, “மாணவர்கள் மூன்றாவது மொழி படிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. மூன்றாவது மொழி விருப்பப் பாடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டாய பாடமாக இருக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஆளுநர் நேற்று (டிசம்பர் 9) துணைவேந்தர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக செய்தியாளர் கேள்வி கேட்டதற்கு, “ஆளுநர் கல்வித் துறை குறித்து கேட்டுள்ளார் அவ்வளவுதான், அவரின் நடவடிக்கை வர வர மாறும்” என்றார்.
இதையும் படிங்க: வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை மற்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை - ராமதாஸ்