ETV Bharat / state

மகளிர் உரிமைத்தொகையை வாங்க மறுத்த 64 லட்சம் பெண்கள் - அமைச்சர் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல் - தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில்

தஞ்சையில் 40-க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் 64 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை வேண்டாம் என கூறியிருக்கும் நிலையில் தகுதி உள்ளவர்கள் மேல்முறையீடு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தஞ்சையில் நலத்திட்டங்களை திறந்து வைத்த பள்ளி கல்வித் துறை அமைச்சர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 7:03 PM IST

தஞ்சையில் நலத்திட்டங்களை திறந்து வைத்த பள்ளி கல்வித் துறை அமைச்சர்

தஞ்சாவூர்: அம்மாபேட்டை, புளியக்குடி, மெலட்டூர், கத்திரிநத்தம், அகரமாங்குடி, வடக்குமாங்குடி, திருக்கருக்காவூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூபாய் 8.36 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அங்கன்வாடி பள்ளி கட்டிடம், ரேசன் கடை, ஊராட்சி அலுவலக கட்டிடம், துணை நகர் நல மையம், வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (அக் 16) காலை முதல் மாலை வரை அந்தந்த பகுதிகளுக்குச் சென்று திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, "பேரிடர் மேலாண்மை குறித்த கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் விரைவில் நடைபெற இருக்கிறது. கூட்டத்திற்கு பிறகு அதற்கு தகுந்தாற்போல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் அதிகப்படியாக மழை பெய்தால் அரசை எதிர்பார்த்து இருக்க தேவை இல்லை. விடுமுறை விடுவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியரே முடிவு செய்து கொள்ளலாம். மழைக் காலங்களில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எப்படி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற அனைத்து வழிமுறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளியில் இடிந்த கட்டிடம், ஊறிப்போன காம்பவுண்ட் சுவர், வெடிப்பு விட்ட கட்டிடங்கள், மின்சாரம் மூடப்படாமல் உள்ள குழிகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக மாற்றி அமைக்கப்படும். பள்ளிகளில் 'காலை உணவு திட்டம்' என்பது வெற்றிகரமான திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது இந்தியாவிற்கு பல்வேறு மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாகவும் இருந்து வருகிறது.

'மகளிர் உரிமை தொகை' திட்டத்தை பொருத்தவரை யாருக்கு கிடைக்கவில்லையோ அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். ஏற்கனவே 64 லட்சம் பேர் இந்த திட்டம் தங்களுக்கு வேண்டாம் என்றும் தாங்கள் வசதி வாய்ப்புடன் இருப்பதாகக் கூறி, திட்டத்தை வேண்டாம் என மறுத்துள்ளனர்.

அதே நேரத்தில் மகளிர் உரிமைத் திட்டத்தில் தேர்வு செய்யப்படாத தகுதி உடையவர்கள் மேல் முறையீடு செய்யலாம். மாவட்ட ஆட்சியரிடம் அவர்களின் மனுக்களை வழங்கலாம். அதை மறு பரிசீலனை செய்யப்படும். மறு பரிசீலனையில் தகுதி உடையவராக இருந்தால், அவர்களுக்கு உரிமை தொகை கிடைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரி கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் எம்பி கல்யாணசுந்தரம் அரசு கொறடா கோவி.செழியன், எம்எல்ஏ ஜவாஹிருல்லா, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: விரைவில் ககன்யான் திட்டம்! இஸ்ரோ தலைவர் கொடுத்த அப்டேட்..! மிகுந்த எதிர்பார்ப்பில் இந்தியர்கள்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.