தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சிவாலயங்களில் நேற்று முன்தினமும், வைணவ ஆலயங்களில் நேற்றும் கொடியேற்றத்துடன் மாசி மக உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்கரபாணி சுவாமி, ஸ்ரீ ஆதிவராக பெருமாள், ஸ்ரீகோபால் சுவாமி ஆகிய வைணவ திருத்தலங்களில் நேற்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.
ஆலயத்திலுள்ள கொடி மரங்களுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஸ்ரீ கருட வாகன கொடியினை மங்கள வாத்தியங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள் கொடிமரத்தில் ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீசக்கரபாணி சுவாமி ஆலயத்தின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் வரும் 8ஆம் தேதி மாசி மகத்தன்று நடைபெற உள்ளது. அதே மாசி மகத்தன்று சாரங்கபாணி கோயிலில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க : 'ரஜினி அனைத்தும் அறிந்தவர்; அவர் ஒரு லெஜெண்ட்'