ஊரடங்கு காரணமாக காணொலிக் காட்சி வாயிலாக, திருமணத்தை நடத்தியிருப்பது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியை வளர்மதியின் மகள் வெண்பாவின் திருமணம் தான் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.
இரண்டு மாதங்களுக்கு முன்பே தேதி முடிவுசெய்த திருமணம், எதிர்பார்க்காத வகையில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், எப்படி நடத்தலாம் என குடும்ப உறுப்பினர்கள் ஆலோசித்தனர்.
'ஸூம்' செயலி பாதுகாப்பில்லை: மாநில அரசுகளை எச்சரித்த மத்திய அரசு
அப்போது, மகளின் திருமணத்தை ஸூம் செயலி மூலம் நடத்துவது என முடிவுசெய்து, புதுச்சேரியைச் சேர்ந்த மணமகன் சந்திரபாண்டியன் குடும்பத்தினரின் சம்மதத்துடன் எளிமையான முறையில், சமூக விலகலை கடைப்பிடித்து திருமணம் செய்தார்.
ஸூம் ஆப்: வீட்டிலிருந்து வேலை செய்யும் டெக்கிகளுக்கு ரான்சம்வேர் அச்சுறுத்தல்!
மணமக்களுடன் இரு குடும்பத்தினர் சார்பில் 5 பேர் மட்டுமே உடனிருக்க, பிற உற்றார் உறவினர்கள் அனைவரும் ஸூம் செயலி மூலம், இணைந்து காணொலிக் காட்சியில் திருமணத்தைக் கண்டு, மகிழ்ந்து புதுமண ஜோடிக்கு வாழ்த்துகளைக் கூறினர்.
காணொலிக் காட்சி வாயிலாக திராவிடர் கழக பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார்.