கரோனா ஊரடங்கு உத்தரவால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிலுள்ள மாணவ-மாணவிகளுக்கு கரோனா வைரஸ் நோயைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருவாரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
மன்னார்குடி தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கரோனா வைரஸை ஒழிப்பது குறித்த ஓவியங்களை ஆர்வமுடன் வரைந்தனர்.
மாணவர்களின் ஓவியங்களைத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை திருவாரூர் மாவட்ட அலுவலர் G.அனுசியா பார்வையிட்டார்.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் மண்டல மற்றும் மாநில அளவிலான ஓவியப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் புகையிலைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு வரவேற்பு!