இது தொடர்பாக இன்று ஈடிவி பாரத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், 'தஞ்சை பெருவுடையார் கோயிலில் இன்று ஆய்வு செய்தபோது குடமுழுக்கிற்காக வளர்க்கப்படும் யாக குண்டங்கள் மற்றும் புனிதநீர் வைக்கப்பட்டுள்ள இடத்தில் தமிழ் மந்திரங்கள் ஓத அனுமதிக்கவில்லை சமஸ்கிருதத்தில் மட்டும்தான் ஓதுகின்றனர். உயர் நீதிமன்ற தீர்ப்பை முறையாக பின்பற்றப்படாத சூழல்தான் நிலவுகிறது.
தமிழில் முறையாக வழிபாட்டை நடத்தி உயர் நீதிமன்ற தீர்ப்பை சரியாக மதித்து செயல்படுத்துங்கள் என இணை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். முறையாக செயல்படுத்தவில்லை என்றால் வழக்கு தொடர்வோம் என அவரிடமே தெரிவித்துவிட்டோம்.
80 ஓதுவார்களும் முறையாக எல்லா இடங்களிலும் தமிழ்த் திருமுறைகளை இணை பாட அனுமதிக்க வேண்டும் என்றும் சிவாச்சாரிகளைவிட ஓதுவார்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களை அனுமதியுங்கள் என்றும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும் தமிழ் மந்திரங்கள் என்னவென்று விளக்கும் புத்தகங்களையும் நாளை அனைவருக்கும் கொடுக்கவுள்ளோம். பெரிய கோயில் கோபுரக் கலசத்தில் ஏறும் 2 தமிழ் ஓதுவார்கள் தமிழ் மந்திரம் சொல்ல அனுமதிக்கப்படுவார்களா என்பதும் சந்தேகமே’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க : திமுகவில் ஓங்கும் பேரன்களின் கை! - வெத திருச்சியில போட்டாச்சு...!