ETV Bharat / state

குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் தொடங்கியது

author img

By

Published : Feb 7, 2020, 1:24 PM IST

தஞ்சாவூர்: பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற மண்டலாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Pradosam festival at big temple
Mandalapishekam started at Brihadeeswara Temple

தஞ்சை பெருவுடையார் கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் (பிப். 05) குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஏறத்தாழ நான்கு லட்சம் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற மண்டலாபிஷேகத்தில் பெருவுடையார், பெரியநாயகி உள்பட அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கும் பால், மூலிகை எண்ணெயில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இந்த மண்டலாபிஷேகம் தொடர்ந்து 24 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

மண்டலாபிஷேகம் வழக்கமாக 48 நாட்களுக்கு நடைபெறும். ஆனால், மகா சிவராத்திரி விழா மார்ச் 22ஆம் தேதி நடைபெறவுள்ளதாலும், சித்திரை திருவிழா, காப்புக் கட்டும் விழா நடைபெற இருப்பதால் 24 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது.

மண்டலாபிஷேகம் தொடங்கியது

முன்னதாக நந்திகேசுவரருக்கு பால், மூலிகை எண்ணெய் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அங்கவஸ்திரம் சாத்தி, மாலை சூட்டி அலங்கரிக்கப்பட்ட பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற மங்கள இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

இதையும் படிங்க: மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Intro:தஞ்சாவூர் பிப் 06

தஞ்சாவூர் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் தொடங்கியது. பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு பால் மற்றும் மூலிகை எண்ணை அபிஷேகம்.Body:

தஞ்சை பெருவுடையார் கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று குடமுழுக்குப் பெருவிழா நடைபெற்றது. இதில், ஏறத்தாழ 4 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து, மண்டலாபிஷேகம் தொடங்கியது. இதில், பெருவுடையார், பெரியநாயகி உள்பட அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கும் பால், மூலிகை எண்ணெயில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இந்த மண்டலாபிஷேகம் தொடர்ந்து 24 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதில், நாள்தோறும் பெருவுடையார், பெரியநாயகி உள்பட அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கும் பால் மற்றும் மூலிகை எண்ணெய்யால் அபிஷேகம் செய்யப்படவுள்ளது. மண்டலாபிஷேகம் வழக்கமாக 48 நாட்களுக்கு நடைபெறும். ஆனால், மகா சிவராத்திரி விழா மார்ச் 22}ம் தேதி நடைபெறவுள்ளதாலும், சித்திரை திருவிழா காப்பு கட்டும் விழா நடைபெற இருப்பதால் மண்டலாபிஷேகம் 24 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு டிசம்பர். 2ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டதால், பிரதோஷம் நடத்தப்படவில்லை. குடமுழுக்கு விழா முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று பிரதோஷம் நடைபெற்றது. இதில், நந்திகேசுவரருக்கு பால், மூலிகை எண்ணெய் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அங்கவஸ்திரம் சாத்தி, மாலை சூட்டி அலங்கரிக்கப்பட்ட பிறகு தீபாராதனை செய்யப்பட்டது. இதையொட்டி, மங்கள இசை நிகழ்த்தப்பட்டது. இவ்விழாவில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Conclusion:Sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.