ETV Bharat / entertainment

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 6 தமிழ் திரைப்படங்கள்! - oscars 2025 tamil movies - OSCARS 2025 TAMIL MOVIES

oscars 2025 tamil movies nominations: ஆஸ்கர் விருதிற்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் laapataa ladies பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தேசிய அளவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 6 தமிழ் திரைப்படங்கள்
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 6 தமிழ் திரைப்படங்கள் (Credits - Film posters)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 23, 2024, 4:20 PM IST

சென்னை: உலக அளவில் சினிமாத்துறையில் மிகவும் பெருமைமிக்க விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு முறையும் ஆஸ்கர் விருது வெல்லப் போகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படிப்பட்ட ஆஸ்கர் விருதை ஏ.ஆர்.ரகுமான் கடந்த 2008ஆம் ஆண்டு slumdog millionaire படத்திற்காக வென்றார். அதனைத்தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக கடந்த ஆண்டு இசையமைப்பாளர் கீராவணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் வென்றனர்.

இந்நிலையில் இந்த வருடம் ஆஸ்கர் விருதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பிரிவில், ’laapataa ladies’ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஆஸ்கர் விருதுக்கு தமிழ் திரைத்துறை சார்பில் இந்த ஆண்டு 6 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டது. இதில் மகாராஜா, வாழை, ஜமா, கொட்டுக்காளி, தங்கலான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

மகாராஜா: நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நட்டி, சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஜுன் மாதம் வெளியான திரைப்படம் 'மகாராஜா' இப்படம் வெளியானது முதல் திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் மகாராஜா திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படம் நெஃட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 6 திரைப்படங்கள்
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 6 திரைப்படங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சென்ற ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரது நடிப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இடம்பெற்றுள்ளது.

வாழை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படம் ‘வாழை’. இயக்குநர் மாரி செல்வராஜ் தான் சிறு வயதில் எதிர்கொண்ட பிரச்சனைகளை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆஸ்கர் விருது சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ’Laapataa ladies’ - Laapataa ladies for oscars 2025

தங்கலான்: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படம் ‘தங்கலான்’ இப்படத்தில் நடிகர் விக்ரம் நடிப்பு, ஜீ.வி.பிரகாஷ் இசை பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படம் உலக அளவில் 100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்தது.

கொட்டுக்காளி: பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ’கொட்டுக்காளி’. உலக அளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று கவனம் பெற்ற கொட்டுக்காளி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இதனிடையே கொட்டுக்காளி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜமா: பாரி இளவழகன் இயக்கி, கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘ஜமா’. தெருக்கூத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஜமா திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. பாரி இளவழகன், சேத்தன் ஆகியோரது நடிப்பு பாராட்டை பெற்றது. இப்படம் அமேசான் ஒடிடி தளத்தில் இடம்பெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.