ETV Bharat / state

மின்சாரம் தாக்கி ஊனமுற்ற மகனின் மருத்து செலவுக்கு உதவி கேட்கும் தந்தை - பட்டுக்கோட்டை

தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி ஊனமுற்ற இளைஞர் ஒருவரின் மருத்துவ செவலை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவரது தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

Man seeks Gvt aid to recover his handicapped son
author img

By

Published : May 20, 2019, 9:41 AM IST

பட்டுக்கோட்டை அருகில் உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சபாபதி. இவரது மகன் சூர்யா (23). இவர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், கஜா புயலில் மின்சாரம் சீரமைப்பு பணியில் தினக்கூலியாக யூனியன் மூலமாக அழைக்கப்பட்டு வேலை பார்த்துவந்தார். அப்போது, மின் கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது திடீரென மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தொங்கியபடி இருந்தார்.

இதை எதார்த்தமாக அந்த வழியாகச் சென்ற ஒருவர் பார்த்துவிட்டு உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து சூர்யாவை மின் கம்பத்திலிருந்து கீழே இறக்கி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததன் பேரில் சூர்யாவின் உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. ஆனால் முழுமையாக குணம் அடைய முடியாமல் கை கால்கள் முடங்கிப் போய் பேசவும் முடியாமல் தவித்து வருகிறார்.

இவர், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தொடர்ந்து சிகிச்சைக்காக செலவு செய்ய முடியாமல் தற்போது வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டனர். தன்னுடைய ஒரே மகனின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையில் சூர்யாவின் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.

ஊனமுற்ற மகனின் மருத்து செலவுக்கு உதவி கேட்கும் தந்தை

இதுகுறித்து நம்மிடம் பேசிய சூர்யாவின் தந்தை சபாபதி, "இன்னும் குறிப்பிட்ட நாள் சிகிச்சை அளித்தால் ஓரளவுக்கு எழுந்து நடக்க வைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தும் மேற்கொண்டு என்னுடைய மகனின் சிகிச்சைக்காக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பலமுறை அரசு அலுவலர்கள், முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோருக்கு மனு கொடுத்தும் இதுவரை அரசு சார்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தார்.

மேலும், அந்த இளைஞனின் வாழ்வை மீட்டெடுக்க அரசு முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Intro:மின்சாரம் தாக்கி வாழ்விழந்து தவிக்கும் இளைஞனுக்கு உதவிக்கரம் நீட்ட அரசுக்கு கோரிக்கை

Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சபாபதி. இவரது மகன் சூர்யா வயது 23 இவர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் கஜா புயலில் மின்சாரம் சீரமைப்பு பணியில் தினக்கூலியாக யூனியன் மூலமாக அழைக்கப்பட்டு வேலை பார்த்து வந்தார். அப்போது மின்கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது திடீரென மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தொங்கியபடி இருந்தார். இதை எதார்த்தமாக அந்த வழியாக வந்த ஒருவர் இதை பார்த்துவிட்டு உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து சூர்யாவை மின் கம்பத்தில் இருந்து கீழே இறக்கி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததன் பேரில் சூர்யாவின் உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது ஆனால் ஒரு முழுமையான குணம் அடைய முடியாமல் கை கால்கள் முடங்கிப் போய் பேசவும் முடியாமல் தவித்து வருகிறார் இவர்கள் குடும்பம் விவசாயக் கூலி என்பதால் தொடர்ந்து சிகிச்சைக்காக செலவு செய்ய முடியாமல் தற்போது வீட்டில் கொண்டு வந்து வைத்துவிட்டனர். தன்னுடைய ஒரே மகனின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையில் சூர்யாவின் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். இன்னும் குறிப்பிட்ட நாள் சிகிச்சை அளித்தால் ஓரளவுக்கு எழுந்து நடக்க வைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தும் மேற்கொண்டு தொடர்ந்து செலவு செய்ய முடியாத காரணத்தினால் தன்னுடைய மகனின் சிகிச்சைக்கு அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பலமுறை அரசு அதிகாரிகள் மற்றும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆகியோருக்கு மனு கொடுத்தும் இதுவரை அரசு சார்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். எனவே இந்த இளைஞனின் வாழ்வை மீட்டெடுக்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் இந்த இளைஞரின் பெற்றோர்கள்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.