தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை கால்வாய் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் விற்பனையாளராக அலமேலுபுரம் பூண்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்(45) என்பவர் பணிபுரிந்துவருகிறார். அவர் வழக்கம்போல் நேற்று(அக்.12) இரவு கடையை மூடிவிட்டு சென்றார்.
இன்று அவர் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளேச் சென்று பார்த்தபோது மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
அதையடுத்து அவர் தோகூர் போலீசார் மற்றும் மதுபான கிடங்கு அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தார். முதல்கட்ட விசாரணையில், கடையின் வைபை மானிட்டர் மற்றும் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 880 மதிப்புள்ள மது பாட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டது. கடையிலிருந்த 6 சிசிடிவி கேமராக்களில் 3 கேமராக்கள் உடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்களின் நலனில் அக்கறை கொள்ளுமா அரசு?