ETV Bharat / state

டாஸ்மாக் கிடங்கு முன் நின்ற லாரியில் திருட்டு; பெட்டியில் ஓட்டை போட்டு கைவரிசை காட்டியது யார்? - தஞ்சாவூர் செய்திகள்

அரசு மதுபானக் கிடங்கின் முன்பு தார் பாய் போட்டு மூடி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில், திருடியதாக சந்தேகத்தின் பேரில் இருவரிடம் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

tasmac
டாஸ்மாக்
author img

By

Published : May 15, 2023, 3:41 PM IST

அரசு மதுபான கிடங்கின் முன்பு தார் பாய் போட்டு மூடி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் திருட்டு

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவல் சரகம், அம்மாசத்திரம் சிட்கோ தொழிற்பேட்டையில் அரசு மதுபான மத்திய கிடங்கு அமைந்துள்ளது. பலரகமான மதுபான வகைகள், பல்வேறு இடங்களில் உள்ள உற்பத்திக் கூடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கு வைத்து, இங்கிருந்து தேவைக்கு ஏற்ப சம்மந்தப்பட்ட அரசு மதுபானக் கடைகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

இந்நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், லாரிகளில் இருந்த மதுபானங்களை இறக்க முடியாமல், லாரிகளில் தார்பாய் போட்ட நிலையில், வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாலகுமாரன் மற்றும் இமானுவேல் ஆகிய இரு ஓட்டுநர்களின் லாரிகளில் இருந்து தார் பாயை பிரித்து, 10 அட்டை பெட்டிகளில் இருந்த மதுபான புட்டிகளை மர்ம நபர்கள் சிலர் லாவகமாக திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து பாலகுமாரன் மற்றும் இமானுவேல் ஆகியோர் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டதில் இந்த நூதன திருட்டில் மயிலாடுதுறையைச் சேர்ந்த இருவருக்கு தொடர்புள்ளது என தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து வந்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அரசு மதுபான கிடங்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்து மதுபான புட்டிகள் மாயமான சம்பவம் அம்மாசத்திரம் தொழிற்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு.. விரக்தியில் கோயில் வளாகத்தில் பாலை கொட்டிய பக்தர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.