ETV Bharat / state

சுவாமிமலை முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

அறுபடை வீடுகளில் 4-ம் படைவீடான சுவாமிமலை முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

சுவாமிமலையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட கார்த்திகை தீபம்

author img

By

Published : Dec 7, 2022, 10:56 AM IST

தஞ்சாவூர்: அறுபடை வீடுகளில் 4-ம் படைவீடான சுவாமிமலை முருகன் கோயிலில் கார்த்திகை பெருவிழா 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கார்த்திகை பெருவிழா 28 ஆம் தேதி திங்கட்கிழமை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

கார்த்திகை பெருவிழாவினை முன்னிட்டு நாள்தோறும் காலையில் படிச்சட்டத்திலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. திருக்கார்த்திகை தினமான நேற்று (டிச.6) அதிகாலை மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தங்க கவசம், வைரவேல் அணிவிக்கப்பட்டன.

கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

இதனையடுத்து பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மூலவர் சுவாமிநாத சுவாமியை தரிசனம் செய்தனர். பிறகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருத்தேரில் எழுந்தருள, நூற்றுக்கணக்கானோர் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

நேற்றிரவு மலைக்கோயிலில் மேலே பெரிய கொப்பரையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமிகள் சன்னதி தெருவிற்கு எழுந்தருள, அங்கு சொக்கப்பனை ஏற்றுதலும் சிறப்பாக நடைபெற்றது. 10 ஆம் நாளான இன்று (டிச. 7) காவிரியாற்றில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: சுவாமிமலை கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.