திருச்சி மண்டலத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு ஒன்பது வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு காவல் உதவி ஆய்வாளராக பதவி ஏற்கும் விழா தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெய்ராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும் நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதிதாக பதவியேற்றுள்ள காவல் உதவி ஆய்வாளர்கள் பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டும்.
ஆன்லைன் லாட்டரி டிக்கெட் நடத்துபவர்கள் மீது கிடைத்த தகவல்களை வைத்து சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்து தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக கிடைக்கக்கூடிய புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் சீதாராமன் உள்பட பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.