ETV Bharat / state

12 ஆலயங்களில் கருட சேவை - திருவிழாக்கோலம் பூண்ட கும்பகோணம்!

தஞ்சாவூர்: அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணம் பெரியகடை வீதியில் பன்னிரெண்டு வைணவ ஆலயங்களில் கருடசேவை நடைபெற்றது.

12 ஆலங்களில் கருட சேவை
author img

By

Published : May 8, 2019, 8:08 AM IST

கோயில் நகரமான கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அட்சய திருதியை அன்று பெரியகடை வீதியில் அனைத்து பெருமாள் ஆலயங்களும் கருட சேவை நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், நேற்று அட்சய திருதியை முன்னிட்டு பெரியகடை வீதியில் ஒரே இடத்தில் சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, ஆதிவராகர், கிருஷ்ணர், பட்டாபிராமன், ராஜ கோபாலன், வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட பன்னிரெண்டு பெருமாள்களின் கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது.

12 ஆலயங்களில் கருட சேவை

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஒரே இடத்தில் பன்னிரெண்டு வைணவ ஆலயங்களில் கருடசேவை நடைபெற்றதையொட்டி கும்பகோணமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

Intro:Body:

 ஒரே இடத்தில் 12 வைணவ ஆலயங்களில் இருந்து வந்திருந்த பெருமாள்களின் கருட சேவை.   

     தஞ்சாவூர் மாவட்டம் கோவில் நகரமான கும்பகோணத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பன்னிரண்டு வைணவ ஆலயங்களில் கருடசேவை  நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அட்சய திருதியை அன்று கும்பகோணம் பெரிய கடை வீதியில்  அனைத்து பெருமாள் ஆலயங்களில் இருந்துவரும் பெருமாள்களின் கருட சேவை  நடைபெறுவது வழக்கம் .இன்று அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணம் பெரிய கடைவீதியில் ஒரே இடத்தில் சாரங்கபாணி ,சக்கரபாணி, ராமசாமி ,ஆதிவராகர் ,கிருஷ்ணர், பட்டாபிராமர், ராஜ கோபாலன், வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட 12 வைணவ ஆலயங்களில்உள்ள பெருமாள்களின் கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .ஒரே இடத்தில் 12 வைணவ ஆலயங்களில் கருடசேவைநடைபெற்றதை ஒட்டி  கும்பகோணமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.