ETV Bharat / state

சமக பிரமுகர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை! - district session court order for murder case

கும்பகோணத்தில் சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகளில் நால்வருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், இருவரை விடுவித்தும் கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

அண்ணன் தம்பி இருவருக்கும் ஆயுள் தண்டனை.. கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மணிகண்டன், மணிமாறன் (கோப்புப்படம்)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 10:13 AM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் கக்கன் காலனியில் வசித்து வந்தவர் மாயவன் மகன் பரமு(எ)பரமசிவம் (வயது 38). சமத்துவ மக்கள் கட்சி பிரமுகரான இவர், அப்பகுதியில் பிளக்ஸ் போர்டு அமைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பவர் இவரது கடைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தி தகராறு செய்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, பரமசிவம் மணிகண்டன் பெயரில் புகார் அளித்துள்ளார். இதனால் பரமசிவத்திற்கும், மணிகண்டனுக்கும் இடையே முன்பகை ஏற்பட்டது. இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டு வந்து நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி மாலை, பரமுவின் தொழிற்கூடத்திற்கு வந்த மணிகண்டன் (வயது 26), மணிமாறன் (வயது 23), அய்யப்பன் (வயது 24), முருகன் (வயது 45), ஏழுமலை (வயது 52), மற்றும் கார்த்தி (வயது 23) ஆகிய ஆறு பேர் கொண்ட கும்பல் தகராறு செய்ததுடன், பரமுவை அவரது உறவினரான திருமலை முன்னிலையில், சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு காவல்துறை, 571வது குற்ற எண்ணாகக் கொண்டு இந்திய தண்டனை சட்டம்(IPC) 147, 148, 294(பி), 302, மற்றும் 120(பி) ஆர் டபுள்யூ 149 என ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சீமானுக்கு எதிரான புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் துணை ஆணையர் விசாரணை!

மேலும், இது தொடர்பான வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதனைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாகக் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ஆம் தேதி குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த படுகொலை வழக்கில், விசாரணை முழுமையாக முடிந்த நிலையில், இவ்வழக்கிற்குக் கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதில், குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரில், அண்ணன், தம்பிகளான மணிகண்டன் மற்றும் மணிமாறன், நண்பர்களான அய்யப்பன் மற்றும் கார்த்திக் ஆகிய நால்வருக்கும், ஆயுள் தண்டனையுடன் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், எஞ்சிய முருகன் மற்றும் ஏழுமலை ஆகிய இருவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டுள்ளார்.அதனைத்தொடர்ந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்தியச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: ஜவான் திரைப்பட விழாவிற்குச் சென்று திரும்பியபோது சோகம்.. மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.