ETV Bharat / state

கும்பகோணத்தில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை - மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து

தஞ்சை: கும்பகோணத்தில் பட்டப்பகலில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

50 சவரன் கொள்ளை
author img

By

Published : Mar 17, 2019, 1:46 PM IST

தஞ்சை மாவட்டம்கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் லட்சுமிகாந்தன். இவரும் இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். இதனையறிந்த அடையாளம் தெரியாத கும்பல் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 50 சவரன் நகைகள், வைரத்தோடு ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்றனர்.

இந்த நிலையில் வீடு திரும்பிய லட்சுமிகாந்தன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதனையடுத்து நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே இக்கொள்ளைச் சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகிலேயே மற்றொரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த மூன்று சவரன் நகை, ரொக்கத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்
 மாவட்டம் 
சுதாகரன் 997664401
16 .3 .19.

கும்பகோணதில் பட்டபப்கலில் மருத்துவர் வீட்டில் 50 பவுண் நகை கொள்ளை கடந்த வெள்ளிகிழமை மின்வாரிய அலுவலர் வீட்டில்  கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதால் மக்கள் அச்சதில் உள்ளனர்

தஞ்சை மாவட்டம்
 கும்பகோணம்   பட்டப்பகலில் மருத்துவர் லட்சுமிகாந்தன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 50 சவரன் நகைகள், வைரத்தோடு கொள்ளை.
  மருத்துவர்  லட்சுமிகாந்தன் . இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர் பின்ள வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உள் புறம் தாழ் போட்டு இருந்தது.   இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது,  மர்ம நபர்கள்  பீரோவை உடைத்து, அதிலிருந்த  50 சவரன் நகைகள், ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம், மற்றும் வைரத்தோடு, ஆகியவற்றை திருடிச்சென்றது தெரிய வந்தது. திருட்டு போன நகைகளின் மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது . இது தொடர்பாக நாச்சியார்கோவில் போஸூசார்  சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் டிஎஸ்பிக்கள் ராமச்சந்திரன் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள். இதனிடையே  இக் கொள்ளைச் சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகிலேயே மற்றொரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த  3 சவரன் நகை மற்றும் 2000 ரூபாய் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர் .
இவ்விருசம்பவங்கள் குறித்து நாச்சியார்கோவில் காவல் நிலையத்தார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த வெள்ளியன்று நாச்சியார்கோவில் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட  ராஜமீனா நகரில் மின்வாரிய அலுவலர் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 50 சவரன் நகைகள் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதால் மக்கள் அச்சதில் உள்ளனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.