ETV Bharat / state

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.. கேஸ் விலை குறைப்பை சாடிய கே.எஸ்.அழகிரி - சமையல் எரிவாயு சிலிண்டர் குறித்து கே எஸ் அழகிரி

KS Alagiri: தேர்தலை கருத்தில் கொண்டே கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள கே.எஸ்.அழகிரி, பாஜக அரசின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 6:58 AM IST

கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பு

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நேற்று 16 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுக்காக நடைபெற்ற சோழ மண்டல வாக்குசாவடி பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், "கும்பகோணத்தில் நடைபெற்ற சோழ மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கான பயிற்சி பாசறை கூட்டம் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடந்து முடிந்துள்ளது, தமிழகம் முழுவதும் மொத்தம் பத்து இடங்களில் இது போன்ற மண்டல கூட்டங்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட கூட்டம் திண்டுக்கல் மண்டலத்தில் நடைபெறுகிறது" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "தமிழகத்தில் காவிரி பிரச்னை தான் பெரிய பிரச்னையாக உள்ளது. ஆனால் இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாகவும், அற்புதமாகவும் கையாண்டார், அவர் ஒரு அமைதி புரட்சியாளர், மக்களின் உணர்வுகளை தூண்டி மக்களை தவறான திசைக்கு இட்டுச்செல்லாமல், தனது ஆட்சியையும், கொள்கையினையும் பயன்படுத்தி, நிதானமாக, உறுதியாக தான் மேற்கொள்ளும் பணியை செய்கிறார்.

இதற்காக அவரை பாராட்டுதாகவும், அவரது முயற்சியால் இன்று கர்நாடகாவில் இருந்து நாள்தோறும் 15 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறதாகவும், காவிரி ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பும் நமக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்திற்குரிய காவிரி நீரை திறக்க, கர்நாடகாவில் உள்ள பாஜக முன்னாள் முதலமைச்சர்கள் பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பா எதிர்ப்பு குரல் கொடுத்தவுடன், இங்குள்ள பாஜக தலைவர் அண்ணாமலை வாய் திறக்கவில்லை, அதற்கு எதிராக தமிழக மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வரவில்லை" என சாடினார்.

மேலும், அவரை போலவே, மத்திய அமைச்சர் முருகன், நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர், வானதி சீனிவாசன் போன்றார் வாய்திறக்காமல் மௌனம் காத்ததன் மூலம் அவர்கள் யார் என்பதை அவர்களே காட்டிக் கொடுத்து விட்டனர். எந்த காலத்திலும் நாம் காவிரி பிரச்னையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். தமிழகத்திற்குரிய காவிரி நீரை பெற்றே தீருவோம்" என்று உறுதியாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசும் போது, "நாடு முழுவதும் உள்ள 600 சுங்கசாவடிகளில், 5 சுங்க சாவடிகளில் மட்டும் சோதனை மேற்கொண்டதில், அங்கு மட்டுமே ரூபாய் 130 கோடி ரூபாய் அளவிற்கு சட்டத்திற்கு புறம்பாக, நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கூடுதல் தொகை வசூல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சென்னை அருகேயுள்ள பரனூர் சுங்கசாவடியில் மட்டும் ரூபாய் 6.5 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என சிஏஜி அறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது" என தெரிவித்தார்.

மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாய் குறைத்துள்ளது, யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதை போல, இது தேர்தல் வருவதற்கான அறிகுறி. மன்மோகன்சிங் பிரதமராக இருந்து காலகட்டத்தில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 108 டாலராக இருந்து. அப்போது சமையல் எரிவாயு சிலிணரின் விலை 400 ரூபாயாக ஆக இருந்தது.

ஆனால் தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 60 முதல் 70 டாலராக இருக்கும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் 200 ரூபாய் அளவிற்கு தான் இருக்க வேண்டும். ஆனால் மோடி அரசு அதனை 1200 ரூபாய் முதல் 1400 ரூபாய் ஆக வைத்துள்ளது" எனறு கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: "நாங்க இந்து சேனா.. விஷ்ணு பக்தர்கள்.. காசுகேட்டா தப்பா?" - நன்கொடை கேட்டு தகராறில் ஈடுபட்ட நபர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.