தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய தமிழ் மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை பெரிய கோயிலில் கொண்டாடப்படுகிறது. ராஜராஜ சோழன் பிறந்த தினமும் முடிசூட்டிய தினமுமான ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரத்தில், ஆண்டுதோறும் ராஜராஜன் சதய விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டுவருகிறது.
அந்த வகையில், இந்தாண்டு 1034ஆவது ஆண்டு சதய விழா மங்கள இசையுடன் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில், கோவையில் முதன் முறையாக ராஜராஜ சோழனுக்கு சதய விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், கோவையைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு ராஜராஜ சோழனுக்கு அபிஷேக பூஜை நடத்தினர்.
பின்னர் ராஜ அலங்காரத்தில் தோன்றிய சோழனுக்கு சிறப்பு தீபாராதனை பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து சோழனின் சாதனைகள் குறித்த சொற்பொழிவு நடைபெற்றது. கோவையில் முதல் முறையாக ராஜராஜ சோழனுக்கு சதய விழா கொண்டாடப்பட்டது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராஜராஜ சோழனுக்கு கோயில் கட்டுமா தமிழ்நாடு அரசு? - இந்து தமிழர் கட்சி