ராஜராஜ சோழன் அரியணை ஏரிய நாளான சதயவிழா ஒவ்வொரு வருடமும் விமர்சையாகக் கொண்டாடப்படும். இந்தாண்டு ராஜராஜ சோழன் 1034ஆவது சதய விழா, வருகின்ற நவம்பர் ஐந்தாம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளது. இது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
அதில், சதய விழாவுக்காக தற்காலிக சுற்றுலாத் தகவல் மையம் அமைத்தல், கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கவியரங்கம், மத்திய தொல்பொருள் துறை முதுநிலைப் பாதுகாப்பு அலுவலர் விழாவிற்கு பந்தல் அமைப்பது, மின் அலங்காரம் செய்வது ஆகியவை குறித்து பேசப்பட்டது. மேலும் கலை பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் சதய விழாவினை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு நடைபெறும் கலைநிகழ்ச்சி தொய்வில்லாமல் நடத்திட ஏற்பாடு செய்தல் வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கூறினார் .
சதய விழா நடைபெறும் இரண்டு நாட்களிலும் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவக் குழுவினரை தயார் நிலையில் இருக்கவும் திருவையாறு, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிக்கலாமே: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் சீரமைப்புப் பணிகள் தீவிரம்