தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள பள்ளிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல் மகன் சக்திவேல்.
இவர் ராணுவத்தில் பணியாற்றிய நிலையில் கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் உயிர் நீத்தார்.
இதையடுத்து ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அவரது சொந்த ஊரான பள்ளிகொண்டான் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவு சின்னம் அமைத்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகொண்டான் கிராம மக்கள் கார்கில் போர் நினைவு தினம் அன்று மலர்வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று கார்கில் போர் நினைவு தினம் என்பதால் பள்ளிகொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் தலைமையில் சக்திவேல் நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து தீபம் ஏற்றி, கையில் மெழுகுவர்த்தி ஏந்திய நிலையில் மௌன அஞ்சலி செலுத்திய பின் ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க : ஜெய்ஹிந்த்- கார்கில் வெற்றி தினம்- தலைவர்கள் மரியாதை!