தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் டிராகன் சிட்டோ ரியூ கராத்தே பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு, கராத்தேவில் தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி கண்டியன் தெரு பிஎஸ்எஸ் உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அகில இந்திய சிட்டோ ரியூ கராத்தே கழகத்தின் துணை தலைவர் செந்தில் குமார், தகுதி வாய்ந்த மாணவர்களைத் தேர்வு செய்துள்ளார்.
இதில், 18 மாணவர்கள் கருப்பு நிற பெல்ட்டும், எட்டு மாணவர்கள் ப்ரௌன் நிறமும் , ஆறு மாணவர்கள் நீல நிறமும் , 14 மாணவர்கள் பச்சை நிறமும் , ஆறு மாணவர்கள் ஆரஞ்சு நிறமும், 11 மாணவர்கள் மஞ்சள் நிற பெல்ட்டும் பெற்றனர். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன.