தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இன்று (ஜன. 29) காலை 6 மணி நிலவரப்படி வெண்ணாற்றில் மட்டும் 707 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூரில் (இன்று ஜன. 29) காலை 8 மணி நிலவரப்படி அணையின் இருப்பு 105. 98 அடியாகவும், 72.808 டிஎம்சி தண்ணீர் இருப்பாக உள்ளது.
அணைக்கு ஆயிரத்து 34 கனஅடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. அணையிலிருந்து 479 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக மட்டும் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் ஜனவரி 28ஆம் தண்ணீர் மூடப்படுவது வழக்கம். அதுபோல நேற்று மாலையுடன் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
அணையில் இருப்பு, சென்ற ஆண்டைப் போலவே இந்தாண்டும் 100 அடிக்கு மேல் உள்ளது. இதனால், வரும் ஜூன் மாதம் வழக்கம்போல 12ஆம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: கம்பீரமாகக் காட்சியளிக்கும் வைகை அணைக்கு வயது 63!