தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் கரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நகராட்சி, சுகாதாரத் துறை அலுவலர்கள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் கிருமி நாசினி மருந்துகள் அடிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர், நகராட்சி அலுவலர்கள், பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். மேலும் நகரப் பகுதியிலுள்ள வணிக வளாகங்களை மூடுவதற்கு ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே மூடப்படாமல் இருக்கும் வணிக வளாகங்களுக்கு நகராட்சி அலுவலர்கள் சென்று கரோனோ வைரஸ் குறித்து எடுத்துக் கூறியதால், கடைகள் மூடப்பட்டன. அதேபோல், அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
இதையும் படிங்க:சுய ஊரடங்கு உத்தரவு: வெறிச்சோடிக் கிடக்கும் தஞ்சை