ETV Bharat / state

புத்தருக்குப் பிறகு அறிவுப் புரட்சியை உருவாக்கியவர் வள்ளுவர்: கி வீரமணி! - திருவள்ளுவர் குறித்து கி.வீரமணி பேச்சு

தஞ்சாவூர்: புத்தருக்குப் பிறகு சமத்துவத்துக்கு முன்னுரிமை கொடுத்து மிகப் பெரிய அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியவர் திருவள்ளுவர் என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

k veeramani
author img

By

Published : Nov 7, 2019, 12:00 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் சர்ச்சைக்குள்ளான திருவள்ளுவர் சிலைக்கு கி.வீரமணி மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வள்ளுவரைப் பொருத்தவரையில் அவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல, எந்த நாட்டுக்கும் உரியவர் அல்ல. உலகப் பொதுமறை என சொல்லக்கூடிய அளவுக்கு உலகத்துக்கே பொது ஒழுக்க நூலாக வள்ளுவரின் குறள் இருக்கிறது.

புத்தருக்குப் பிறகு அறிவையும், சாதி ஒழிப்பையும் முதன்மைப்படுத்தி, சமத்துவத்துக்கு முன்னுரிமைக் கொடுத்து மிகப் பெரிய அறிவுப் புரட்சியை உருவாக்கியவர் வள்ளுவர். அவர் உலக மக்களுக்கே சொந்தம், உலகத்துக்கே அறிவுரை சொன்னவர். அவருக்கு எந்தச் சாயமும் யாரும் பூசக்கூடாது. பூசினால் கலவரத்துக்கு வித்திடுகின்றனர் என்பதைப் புரிந்து கொண்டு, கட்டுப்பாடுடன் நம்மவர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதன் விளைவை அவர்கள் அறுவடை செய்வர்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட வள்ளுவர் படமும், சிலையும் இருக்கிறது. அதில் எவ்விதமான சின்னமும் கிடையாது. இதை எந்த வகையிலும் கொச்சைப்படுத்தும் நிலை வரக்கூடாது. இதுதொடர்பாக முதலமைச்சர், துணை முதலமைசர் இருவரும் கண்டிக்க வேண்டும். இன்னும் வாய் மூடி மௌனமாக இருக்கக்கூடாது.

கி வீரமணி செய்தியாளர் சந்திப்பு
வள்ளுவரை திமுக எந்தக் காலத்திலும் சொந்தம் கொண்டாடவில்லை. ஆனால், திராவிட இயக்கம் இல்லாவிட்டால் வள்ளுவர் உலகத்துக்கே தெரியாமல் மறைக்கப்பட்டிருப்பார் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது என்றார்.

இதையும் படிங்க: Exclusive திருவள்ளுவர் யார்? அவர் யாருக்கானவர்? - கவிஞர் கலி. பூங்குன்றன் விளக்கம்!

Intro:தஞரசாவூர் நவ 04

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் சர்ச்சைக்கு உள்ளான திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்
Body:

வள்ளுவரைப் பொருத்தவரையில் அவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்லர். எந்த நாட்டுக்கும் உரியவர் அல்லர். உலகப் பொதுமறை என சொல்லக்கூடிய அளவுக்கு உலகத்துக்கே பொது ஒழுக்க நூலாக வள்ளுவரின் குறள் இருக்கிறது. புத்தருக்குப் பிறகு அறிவையும், சாதி ஒழிப்பையும் முதன்மைப்படுத்தி, சமத்துவத்துக்கு முன்னுரிமைக் கொடுத்து மிகப் பெரிய அறிவு புரட்சியை உருவாக்கியவர் வள்ளுவர். அவர் உலக மக்களுக்கே சொந்தம். உலகத்துக்கே அறிவுரை சொன்னவர். அவருக்கு எந்தச் சாயமும் யாரும் பூசக்கூடாது. பூசினால் கலவரத்துக்கு வித்திடுகின்றனர் என்பதைப் புரிந்து கொண்டு, கட்டுப்பாடுடன் நம்மவர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதன் விளைவை அவர்கள் அறுவடை செய்வர்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட வள்ளுவர் படமும், சிலையும் இருக்கிறது. அதில் எந்தவிதமான சின்னமும் கிடையாது. இதை எந்த வகையிலும் கொச்சைப்படுத்தும் நிலை வரக்கூடாது. இதுதொடர்பாக முதல்வர், அமைச்சர்கள் கண்டிக்க வேண்டும். இன்னும் வாய் மூடி மௌனமாக இருக்கக்கூடாது.
வள்ளுவரை திமுக எந்தக் காலத்திலும் சொந்தம் கொண்டாடவில்லை. ஆனால், திராவிட இயக்கம் இல்லாவிட்டால் வள்ளுவர் உலகத்துக்கே தெரியாமல் மறைக்கப்பட்டிருப்பார் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது என வீரமணி கூறினார்Conclusion:Tanjore sudhakaran 9976644011

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.