தஞ்சாவூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மூன்றாவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் தொடக்க விழாவில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆணவக்கொலை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் சில மாநிலங்களில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இச்சட்டத்தை இயற்ற தமிழக அரசு தயாராக இல்லை என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘அரசியலமைப்புச் சட்டத்தை மோடி அரசு மாற்ற முயற்சி செய்து கொண்டு வருகிறது. மோடி ஏதோ சாதனை செய்துவிட்டது போல ரஜினிகாந்த் பேசி வருகிறார், இது உண்மைக்கு புறம்பானது. ரஜினி மோடியை ஆதரித்து பேசுவது அவரது அரசியலுக்கு அச்சாரம் போடும் வகையில் உள்ளது. ரஜினிகாந்த் நான் அரசியல் பேச மாட்டேன் என கூறியிருந்தார், ஆனால் காஷ்மீர் பிரச்னை அரசியல் ஆகிவிட்டது. இந்தச் சூழலில் காஷ்மீர் பிரச்னையை பற்றி பேசுவதே அரசியல் தான். மோடியை நியாயப்படுத்துவதும், அதை எதிர்ப்பதும் அரசியல் தான்’ என்று தெரிவித்தார்.