ETV Bharat / state

சிறார் திரைப்பட விழா - கும்பகோணத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைப்பு

கும்பகோணத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் சிறார் திரைப்பட திருவிழாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்பட விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்

author img

By

Published : Jul 7, 2022, 2:59 PM IST

கும்பகோணம்: முதலமைச்சரின் உத்தரவுபடி, பள்ளி மாணவர்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்திடவும், ஒழுக்கத்தையும், நன்னெறியையும், பெரியவர்களை மதித்து நடத்தல், சமுதாயத்திற்கு உதவுதல் போன்ற நற்பண்புகளை வளர்க்கவும், ஊக்குவிக்கவும், சிறார் திரைப்பட திருவிழாவினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார்.

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த நிகழ்வில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்புரையாற்றினார். பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா தலைமையில், அரசு கொறடா கோவி செழியன் முன்னிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர். சுதன் திட்ட விளக்கவுரையாற்றினார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறார் திரைப்பட திருவிழாவினை தொடங்கி வைத்தார். இதில் இன்று தி கிட் என்ற ஒரு மணி நேரம் திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், மக்களவை உறுப்பினர் (மயிலாடுதுறை) செ. இராமலிங்கம், கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம். சிவக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்சியிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்திடவும், அவர்களிடையே சமுதாயத்திற்கு உதவும் மனப்பான்மை, பெரியோர்களை மதிக்கும் பண்புகளை தெரிந்து கொள்ளவும், நன்னெறிகளை போதிக்கவும், ஊக்குவிக்கும் வகையிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மாதம் ஒரு சிறார்களுக்காண திரைப்படம் திரையிடப்படும். இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பொறுப்பாசிரியர் இருப்பார். அவருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த சிறார் திரைப்படங்கள் வாயிலாக அவர்கள் கல்வி அறிவை தாண்டி, சமுதாயத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எப்படி பழக வேண்டும் என அறிந்துகொள்ள முடியும்.

பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்பட விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்

என்ன விசயங்களை அவர்கள் உள்வாங்கி இருக்கிறார்கள் என்பதனை அறிய அவர்களிடம் இருந்து விமர்சனங்கள் கேட்டுப்பெறப்படும். அந்த விமர்சனங்கள் ஒன்றியம், மாவட்டம், மாநிலம் என வரிசையில் கொண்டு செல்லப்பட்டு நிறைவாக, சிறந்த 15 விமர்சனங்கள் மாநில அளவில், திரைப்பட வல்லுனர்களால் தேர்வு செய்யப்படும். அப்படி சிறந்த விமர்சனங்கள் அளிக்கும் 15 மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு அரசு சார்பில், வெளிநாட்டிற்கு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுவர்” என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.