ETV Bharat / state

தஞ்சாவூர் அரசு கலைக் கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலை.. ரூ. 50,000 வரை சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்.. - தஞ்சாவூர் மாவட்ட செய்தி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 21, 2023, 8:21 PM IST

Updated : Feb 22, 2023, 2:28 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பும் பொருட்டு கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பம் எழுதி, கடவுச்சீட்டு அளவில் புகைப்படம் ஒட்டி, உரிய சான்றிதழ்களின் நகல்களில் சுய கையொப்பமிட்டு(Self Attested) இணைத்து, முதல்வர்(பொ) அரசு கவின் கலைக் கல்லூரி, மேல கொட்டையூர், சுவாமிமலை மெயின் ரோடு, மேலக்காவேரி போஸ்ட், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் 612002. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

1.பதவியின் பெயர் அலுவலக உதவியாளர் (Office Assistant)
2. சம்பள விகிதம் Level-1(15,700-50,000)
3. வயது- 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்(01.07.2022 அன்றைய நிலவரப்படி) அதிகபட்ச வயது 37
4. கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
5. இட ஒதுக்கீடு மற்றும் இன சுழற்சி அ.SC(A) அருந்ததியினர் DISTITUE WIDOW(Woman Priority)- 1
ஆ.GT Gl பொதுப் பிரிவு ஆதரவற்றோர்-1

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.3.23 (மாலை 5.45க்குள் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்)

சரிவர பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும், மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்பட மாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்ப படிவத்தை இணையதளம் https://thanjavur.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பின்றி ரத்து செய்யவோ, கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி முதலமைச்சர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவல்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் உபயதுல்லாவின் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மரியாதை!

Last Updated : Feb 22, 2023, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.